அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்(FAQ)

உங்களது மனுவின் நிலை குறித்து 18/9/2023 முதல் அரசிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், உங்களது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்றால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் எந்த விதிமுறைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை தங்களது ஆதார் எண் மூலமாக லாகின் செய்து கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் என் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும். மேலும் இதுதொடர்பாக, தங்களது வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் பெறப்பட்டுள்ள விவரத்தினை தங்களது வங்கிக் கிளைக்குச் சென்று தங்களது வங்கி கணக்குப் புத்தகத்தினை கொடுத்து உரிய பதிவுகளை மேற்கொள்ள கோருவதன் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

அரசிடம் இருந்து தங்களுக்கு குறுஞ்செய்தி ஏதும் வரப் பெறவில்லை எனில் தங்களது கைபேசியின் இயக்கத்தினை சரிபார்க்கவும். தங்களது விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் பட்சத்திலும் குறுஞ்செய்தி உடனே வராது. தங்களது மனுவின் நிலையை அறிய ஆதார் எண்ணை உள்ளீடு செய்து இணையதளத்தில் சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பதிவு செய்யப்பட்ட தங்களது கைபேசி எண்ணுக்கு தங்களது மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்று 30 நாட்களுக்குள் தாங்கள் தகுதி வாய்ந்த பயனாளி என்பதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையம் வழியாக மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டும்.

19/9/2023 அன்று முதல் தங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு தங்களது விண்ணப்பம் ஏற்கப்படாதற்கான காரணமானது குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் இந்நேர்வில் தாங்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் தங்களது தகுதிக்கான உரிய ஆதாரத்துடன் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையத்தின் வாயிலாக மேல்முறையீட்டு விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

தாங்கள் தகுதி வாய்ந்த பயனாளிகளாக இருந்தால் உரிமைத் தொகை பெற வங்கிக்குச் சென்று வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள தகுதி வாய்ந்த பயனாளிகள் அனைவருக்கும் உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மனு செய்ய விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்கள், விண்ணப்பிக்க அரசால் அறிவிக்கப்படும் தேதியிலிருந்து தங்களது மனுவினை இ- சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.

கூட்டுறவு வங்கி தமிழ்நாடு கிராம வங்கி, ஹெச்டிஎஃப்சி போன்ற தனியார் வங்கி கணக்குகளுடன் மனுதாரர் தனது ஆதார் எண்ணினை இணைத்திருந்தால் தகுதியான பயனாளியாக இருப்பின் உரிமை தொகையானது அந்த வங்கிக் கணக்குகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

தங்களது வங்கியினை நேரில் அணுகி, வங்கி கணக்கினை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் அல்லது புதிய வங்கி கணக்கினை தொடங்கவேண்டும்.

தாங்கள் தகுதியான பயனாளியாக இருப்பின் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையானது தங்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இந்நேர்வு தொடர்பாக தாங்கள் வங்கிக் கணக்கினை வைத்திருக்கும் வங்கியினை அணுகி தீர்வு பெற்றுக் கொள்ளலாம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தங்களது விண்ணப்பத்தினை உரிய வழியில் பதிவு செய்திருந்தால் தாங்கள் பிற தகுதிகளின் அடிப்படையில் தகுதி பெற்று இருப்பின் தாங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவராவர். தங்களது மனுவின் நிலை குறித்து பதிவு செய்யப்பட்ட தங்களது தொலைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் குறுஞ்செய்தி வரும். இவ்வாறு குறுஞ்செய்தி ஏதும் வரப் பெறவில்லை எனில் தங்களது கைபேசி இணைப்பினை சரிபார்க்கவும்.

தங்களது வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட்டது குறித்த குறுஞ்செய்தி ஏதும் வரப் பெறவில்லை எனில் தங்களது தொலைபேசி இணைப்பினை சரிபார்க்கவும்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தாங்கள் மீண்டும் புதியதாக விண்ணப்பம் செய்வதற்கு பதில் தங்களது மனு குறித்த நிலையினை பதிவு செய்யப்பட்ட தங்களது தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வரப்பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை வழியாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தேர்வு பெற்றுள்ள அனைத்து மனுதாரர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு 18/9/2023 முதல் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் உரிமை தொகையாக ரூபாய் ஆயிரம் பெற விதிக்கப்பட்ட நெறிமுறைகளின் கீழான பிற தகுதிகளைப் பெற்றிருப்பின் அரசால் அளிக்கப்பட்ட வீடு தடையாக இருக்காது.

தங்களது மனு நிராகரிக்கப்பட்டிருந்தால், நிராகரிக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையங்களின் வாயிலாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

தங்களது மனு நிராகரிக்கப்பட்டிருந்தால், நிராகரிக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையங்களின் வாயிலாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டமானது இரண்டு முக்கிய நோக்கங்களை கொண்டது

குடும்பத்திற்காக வாழ்நாள் எல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் தான் இதனுடைய முதன்மையான நோக்கமாகும்.

ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்பது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடுத்த நோக்கமாகும்.

குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.

i) ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

ii) குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

iii) குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

iv) குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்திலுள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத்தலைவியாக கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

v) திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒரு நபரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.

i) ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

ii) ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.

iii) ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.

பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதி இல்லாதவர் ஆவர்.

i) ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

ii) குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.

iii) ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.

iv) மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.

iv) மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.

v) தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.

vi) சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.

vii) ஆண்டுக்கு ரூ.50 இலட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.

vi) சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.

viii) ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.

மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லை.

மாற்றுத்திறனாளிகள் நலத்துரையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் முதுகுத்தண்டு வருடம் தண்டுவடம் மரபு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத்திறன் தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன் தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெரும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்க தகுதியானவை இவ்வகைப் பாட்டினார் திட்டத்தின் பிற தகுதிகளை பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வருவாய் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத்தலைவிகளும் பயன்பெறத் தகுதியானவர்கள்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண் மற்றும் குடும்ப அட்டை ஆகியவை அவசியமான ஒன்றாகும் எனவே முதலில் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பம் செய்து அதனைப் பெற்று பின்னர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

நிரந்தரமான வசிப்பிட முகவரியை கொண்டு அதற்கு ஆதாரமாக ஆதார் அட்டை குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு எண்ணை இருந்தால், தற்காலிகமாக வேறு மாவட்டத்தில் வேலை செய்து வருபவரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

ஒன்றிய அல்லது மாநில அரசின் கீழ் வேலை பார்த்து பணி ஓய்வு பெற்று, நிலையாக ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில், தங்களது குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் கீழ் இருந்தாலும் தாங்கள் அல்லது தங்களது குடும்பத்தினர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலாது.